உதயங்க வீரதுங்க சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி



ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு விடுக்கப்பட்ட உத்தரவை தளரத்திக் கொள்ளுமாறு கோரி அடிப்படை உரிமை மனுவை உதயங்க வலயதுங்கவின் மாமியார் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

புவனேகா அலுவிஹாரே, சிசிரா டி அஃப்ரூ மற்றும் நலிண் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். 

உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு பொலிஸ் நிதி மோசடி பிரிவினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி சட்டத்திற்கு முரணானது என்றும் இதனால் உதயங்க வீரதுங்கவின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.