உலக தலசீமியா தினம் இன்று



 
பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலசீமியா நோய் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. 
உலக தலசீமியா தினம் இன்றாகும். இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அலுவலகத்தின் தொற்றாநோய் பிரிவுப்பணிப்பாளர் விசேட வைத்தியர் பலியவதன தெரிவித்தார்.