கிழக்கில் நியமனம் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்



( அப்துல்சலாம் யாசீம் )

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்கள்  வௌியிடப்பட்டிருக்கின்ற நிலையில் சில தொண்டராசிரியர்களின் பெயர்கள்  வௌியிடப்படவில்லையெனவும் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரியும் இன்று (14)  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறை 
நிலவிய பிரதேசங்களிலும்   யுத்தம் ஏற்பட்ட பிரதேசங்களிலம் பல கஷ்டத்தின் மத்தியில் எந்த வேதனமும் இன்றி தொடர்ச்சியாக 4,..7 வருட காலமாக சேவையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.



அத்துடன்  பல நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் தற்போது நடைபெற்ற நேர்முகத்தேர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.


எனவே நல்ல உள்ளம் படைத்த கௌரவ ஜனாதிபதி கெளரவ பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கௌரவ கல்வி அமைச்சர், கௌரவ ஆளுநர் அனைவரும் உண்மையாக பாதிக்கப்பட்ட  தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.