ரமழான் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
அந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை, அவ்வமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளது.
அத்துடன் அதன் பிரதிகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியனவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, முஸ்லிம் மக்களின் சமூக மற்றும் நலன்புரி விடயங்களிலும் அவர்களின் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற அமைப்பாகும்.
இந்நிலையில், ரமழான் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment