உண்மையைக் கூறுவோம்’ எனும் தொனிப்பொருளில், நாடளாவிய ரீதியில் பிரசார நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தியமை முதல் இன்று வரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அன்றிலிருந்து இன்றுவரையிலும் செய்தவற்றை பலரும் இன்று மறந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பணி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், கட்சியின் பிரசார செயலாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம், கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று (04) ஆரம்பித்துவைக்கப்படும். இந்த வேலைத்திட்டத்தின் போது, நாட்டின் நிலைமை, அரசாங்கத்தின் செயற்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment