திருகோணமலை மாவட்டத்தில் 15 குளங்கள் புணரமக்கப்படும்



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில்  எட்டு கமநல சேவை திணைக்களங்களுக்கு கீழ் இயங்கி வருகின்ற பதினைந்து சிறு குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக 
கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று மாவட்டத்தின் விவசாயத்துறைகளின் முன்னேற்றம் பற்றி கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் அபிவிருத்திகள் குறித்து தெரிவிக்கையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்,நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் 58.7 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புல்மோட்டை பகுதியிலுள்ள சமலன்குளம், குச்சவௌி பகுதியிலுள்ள இலுப்பைக்குளம்  சம்பூர் பிரதேசத்தில் சோலைக்குளம்,சின்னநையந்தி குளம் மற்றும் கட்டைக்காட்டுக்குளம்  ஆகிய குளங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை தோப்பூர் பகுதியில் பாலைக்கட்டுக்குளம்  தம்பலகாமம் பகுதியில் புளியூற்றுக்குளம் வாய்க்காலும் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார்  தெரிவித்தார்.

அத்துடன் கோமரங்கடவெல பிரதேசத்திலுள்ள தெமடவெவ,நாவற்குளம்,நாவுல்பொத்த வாய்க்கால் ஆகியவற்றின் வேளைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகும் அவர் குறிப்பிட்டார்.

கன்தளாய் பிரதேசத்திலுள்ள அக்போபுர பகுதியிலுள்ள தல்கஸ்வெவ,அக்போவெவ ஆகிய சிறு குளங்களும் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பங்குளம்  ரொட்டவெவ புளியங்குளம் மற்றும் நொச்சிக்குளம் போன்ற குளங்கள் புணரமைக்கப்ட்டு வருவதாகவும் ரொட்டவெவ புளியங்குளம் புனரமைப்புக்காக 39 இலச்சம் ரூபாய்  நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் நொச்சிக்குளம் குளம் புனரமைப்புக்கு 49 இலச்சம் நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார் குறிப்பிட்டார்.