முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்



இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்துள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பாக இன்றைய போட்டியில் ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 44 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்களையும், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.