3 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1



இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 3 ஆம் நாளில் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமானது. 

இதில் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இலங்கை அணியில் சந்திமால் 119 ஓட்டங்கள், குசால் மெண்டிஸ் 45 ஓட்டங்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பந்துவீச்சில் ஷனான் கெப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களையும் பெற்றனர். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. 

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஹோப் 19 ஓட்டங்களிலும், ஸ்மித் 61 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். 

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 100.3 ஓவரில் 300 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களும், கசுன் ரஜித 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 47 ஓட்டங்கள் முன்னிலை உள்ளது. 

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேரா, மஹில உடவாட்டே ஆகியோர் களமிறங்கினர். பெரேரா 20 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கசுன் ரஜித களமிறங்கினார். 

இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள் பெற்றுள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷனால் கெப்ரியல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் இன்னும் 13 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.