நுாற்றாண்டினை முன்னிட்டு



 (அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை , தம்பலகாமம் ஸ்ரீ கோணேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு பாடசாலை வாத்திய இசைக் குழு மாணவர்களுக்கான சீருடை  அதே பாடசாலையின் 1974/75 க.பொ.த வகுப்பு பழைய மாணவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.



இந் நிகழ்வினை உள்ளூரிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற 1974/75 க.பொ.த வகுப்பு பழைய மாணவர்கள் தங்களது சுய முயற்சியால் ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் மேற்குறிப்பிட்ட வகுப்பின் சகல பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



அதிபரது வரவேற்புரையின் பின் பழைய மாணவரான திரு நா. கஜேந்திரசர்மா (சுவிற்சர்லாந்து) அவர்களது ஆசியுறையின் போது அவரது பாடசாலைக் காலத்தின் ஆசிரியர்கள் யாவரையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் மட்டும் நில்லாது சகல பழைய மாணவர்களும் அவர்களது காலத்தில் கற்பித்த ஆசிரியைகள் இவருக்குப் பொன்னாடை போர்த்தி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சிறப்பித்தனர்.



அதனையடுத்து முக்கிய நிகழ்வாக பாடசாலை வாத்திய இசைக்குழு மாணவர்களுக்கான இரண்டு லட்சத்து முப்பத்து ஐயாயிரம் (235,000/=) பெறுமதியானதும் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு ஈடான அதி உயர்தரத்திலான சீருடைகளை பழைய மாணவர்கள் அனைவரும் தங்களது கரங்களால் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.



இந் நிகழ்வினை முன் நின்று ஏற்பாடு செய்த பழைய மாணவனான பொறியியலாளர் திரு இ. கிருஷ்ணதாசன், தனதுரையில் தனது நீண்ட காலக் கனவு ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது என்றும், இச் சீருடைகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு மட்டுமல்லாது அதிபர் ஆசிரியர்களுக்கும் உரியதாகும் எனக் குறிப்பிட்டார்.



அத்துடன் பழைய மாணவனும் தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளரான திரு. ந. விஜயேந்திரன் அவர்கள் தான் இந் நிலைமைக்கு வரக் காரணமாயிருந்த இப் பாடசாலையில் வலயக் கல்விப் பணிப்பாளராய் இருந்தாலும் இன்று இந் நிகழ்வில் பழைய மாணவனாகவே கலந்து கொள்வதில் பெருமையடைகின்றேன் எனவும் கூறினார்.





டாக்டர் என். ரவிச்சந்திரன் அவர்கள் தனது நன்றியுரையின் போது எங்களைச் செதுக்கிய சிற்பிகளான ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைவருக்கும் எங்கள் வகுப்பு மாணவர்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்வதில் மிகப் பெருமிதம் கொள்கின்றேன் எனக் கூறினா