இவர்கள் வேலையில்லாப் பட்டதாரிகள்



-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளால், இன்று (21) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டமொன்று, முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள், மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடரங்களை அமைத்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முகத் தேர்வுக்குச் சென்ற பட்டதாரிளுக்கு இன்னமும் ஒழுங்கான பதில் நியமனங்கள்  வழங்கப்படாத நிலையில், அரசாங்கத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
 அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதற்காக எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ச்சியாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதும் தங்களை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை எனவும் இச்செயற்பாடானது பட்டதாரிகளாகிய தங்கள் மத்தியில் பாரிய மன உழைச்சளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
குறித்த போராட்டமானது, இன்றுடன் நிறைவடைவதும் அல்லது தொடர்ச்சியாக நடைபெறுவதும் அரசாங்கத்தின் கைகளில் தான்  உள்ளது என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.