உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா அணிகள் இடம்பிடித்துள்ளன.
முகமது சாலா இடம்பிடித்துள்ள எகிப்து அணி சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. அந்த அணி முதல் போட்டியில் உருகுவே அணியை எதிர்கொண்டது. சாலா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் உருகுவே வெற்றி பெற்றது.

அதேவேளையில் முதல் ஆட்டத்தில் ரஷியா சவுதி அரேபியாவை 5-0 என துவம்சம் செய்தது. இந்நிலையில் எகிப்து ரஷியாவை 2-வது ஆட்டத்தில் எதிர்கொண்டது. இதில் 1-3 எனத் எகிப்து தோல்வியை சந்தித்தது. அதேவேளையில் சவுதியை 1-0 என உருகுவே வீழ்த்தியது.
இதனால் தாலா இரண்டு வெற்றிகள் மூலம் ரஷியா, உருகுவே காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தலா இரண்டு தோல்விகளுடன் எகிப்து, சவுதி அரேபியா நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது. எகிப்து வருகிற 25-ந்தேதி சவுதி அரேபியாவையும், ரஷியா உருகுவேயையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளின் முடிவுகள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

Post a Comment
Post a Comment