தரம் 01 தொடக்கம் 05ம் தரம் வரையான மாணவர்கள் மற்றும் விசேட கல்வி பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக பால் பொதிகளை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த திட்டத்தை பால் பக்கட்டுகளின் தற்போதைய உயர்ந்த சந்தை விலையின் கீழும் இவ்வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு, இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Post a Comment
Post a Comment