கல்கிஸ்ஸ இளைஞர் ஒருவர் கொலை



கல்கிஸ்ஸ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (22) இரவு 11 மணியளவில் அந்தப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

சிறிய பிரச்சினை ஒன்று தீவிரமானதால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

கொலைச் சந்தேகநபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.