பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கெழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்காமல் வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீடு செய்திருந்தார்.
நீதிபதி கிஹான் குலதுங்க பக்கச்சார்பாக செயற்படுவதாக மனுதாரரான மஹிந்தானந்த அளுத்கமகே தனது மேன்முறையீட்டில் கூறியிருந்தார்.

Post a Comment
Post a Comment