திருகோணமலையில் மான்களை பாதுகாக்க



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை நகரத்தில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் மான்கள் உணவைத்தேடி சுற்றித்திரிவதாகவும்,இதனால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலைக்கு புகழையும் சுற்றுலா பிரயாணிகளின் வருகையையும் அதிகரித்துள்ள மான்களை பாதுகாப்பதற்கு விஷேட வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளதாக திருகோணமலை நகர சபை முதல்வர் என்.ராசநாயகம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினரின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அதற்கமைவாக அவரது ஆலோசனையின் பேரில் மான்களுக்காக பூங்கா ஒன்றினை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை பகுதிகளில் கடந்த காலங்களாக உணவு தேடி செல்லும் நிலையில் தொடர்ந்தும் பல மான்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

நகரை அழகு  படுத்தும் மான்களை பாதுகாப்பதற்கு புற்களுடனான பூங்கா அவசியம் எனவும்,திருகோணமலையில் வீசப்படும் மறக்கறிகளை இந்த மான்களுக்கு உணவாக வழங்கும் திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நகர முதல்வர் என்.ராசநாயகம் மேலும் தெரிவித்தார்.