குழந்தை கடத்தி விற்பனை செய்த நகர சபை தலைவர் உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல்



தலவாக்கலை - லிந்துலை நகர சபை தலைவர் உள்ளிட்ட நால்வரையும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமித ஜயசேகர உத்தரவிட்டுள்ளார். 

குழந்தை கடத்தல், சட்டவிரோத குழந்தை விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை - லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால உள்ளிட்ட நால்வர் நுவரெலியா பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.