மனசாட்சி இருந்தால் தான் குற்றமற்றவர் என பிரதமரால் சொல்ல முடியாது



அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம், ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

அத தெரண 360 நிகழ்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் பிணைமுறி சம்பவம் தொடர்பில் தான் குற்றமற்றவர் என மனசாட்சி இருந்தால் பிரதமரால் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க அனைவருடைய சக்தியும் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.