(அப்துல்சலாம் யாசீம்)
நடிகர் விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் காலை 8.00மணி முதல் 4.00மணி வரை இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் பிரதர்ஸ் ரசிகர் மன்றத்தின் இணைப்பாளர் வீ.சிறிகரன் தெரிவித்தார்.
திருமலை விஜய் பிரதர்ஸ் ரசிகர் மன்றம் சார்பாக எதிர்வரும் 22ம் திகதி தளபதி விஜய் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறவுள்ள இரத்ததான நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இரத்தம் வழங்குமாறும் அவ்வமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"இரத்தம் கொடுப்பதன் மூலம் யாரும் ஏழையாகி விடுவதில்ல" எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான நிகழ்வு இடம் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்க


Post a Comment
Post a Comment