அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது இன்று (18.06.2018) காலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மோட்டார் பைசிக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசார் ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஏலவே ஒரு தடவையும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலே, இன்றைய இத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வந்தவர்கள் கறுப்பு சீலையால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது..!


Post a Comment
Post a Comment