கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் தொண்டராசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று (06) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்களாக பாடசாலைகளில் கல்வியை கற்பித்து கடந்த ஏப்ரல் மாதம் நேர்முகப்பரீட்சை நடைபெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 456 தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டிருந்த நிலையில் தங்களுக்கு மிக விரைவில் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் இல்லாதனையினால் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவிடம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மகஜரொன்றினையும் வழங்கினார்கள்.
அம்மகஜரில் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் நியமனம் கோரி பல மகஜர்களை கையளித்தும்,கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தியும் உள்ளமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல காலமாக யுத்தம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்ட்டு நிர்க்கதியான நிலையில் தற்போது நிலவுகின்ற சுமூகமான சூழ்நிலையில் பட்டம் பெற்றும் பல வருடங்களாக எந்தவொரு அரச நியமனங்களும் இன்றி தொழில்
ரீதியில் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர்.
எனவே கிழக்கு மாகாண பட்டதாரிகளது நிலையினை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் நியமனத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆளணி வெற்றிடங்கள் மற்றும் விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியைதிய பட்டதாரிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் நியமனம் என்பவற்றை எம் பட்டதாரிகள் அனைவரினதும் நலன் கருதி உடனடியாக ஆசிரியர் நியமனங்களை வழங்கி கிழக்கிலுள்ள ஆளணி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment