இரத்ததான நிகழ்வு)



(அப்துல்சலாம் யாசீம்)


கிழக்கு மாகாண அரச சாரதிகள் நலன்புரிக் கூட்டுறவுச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வு வெள்ளிக்கிழமை  (03) காலை 9.00மணிக்கு திருகோணமலை,வரோதய நகர் பிரதம செயலாளர் செயலகத்தில் நடை பெறவுள்ளது.

பிரதம செயலாளர் அசங்க  அபே குணவர்தன அவர்களின் ஆலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண அரச சாரதிகள் நலன்புரிச்சங்கமும்,கிறீன் சிறிலங்கா அமைப்பும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து திணைக்களங்களைச்சேர்ந்த சாரதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்  இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.