
அமைச்சரால் சத்தியக்கடதாசி மூலம் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிளால் நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால்
அமைச்சர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலால் அங்கிருந்து மக்கள் வௌியேறியிருந்ததாகவும், அவர்களை அங்கு மீள குடியமர்த்த
முயற்சிப்பது காடழிப்பு அல்ல என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
தனது சத்தியக்கடதாசி மூலம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அமைச்சர் குறிப்பிட்டுள்ள காரணங்கள்
பொய்யானது என்று, செயற்கைக்கோள் தொழில்நுட்பம்
மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட காட்சிகள் மற்றும் அரச நில
அளவைத் திணைக்களத்தால் வௌியிடப்பட்ட வரைபடங்கள்
முலம் நீதிமன்றத்தில் மனுதாரர்கள்ஷ தெரிவித்ததாக
செய்தியாளர் கூறினார்.
விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம் அமைச்சர்ஷ ரிஷாத் பதியுதீனின் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கை நவம்பர் மாதம் 12ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Post a Comment
Post a Comment