#LankaDeepa.
அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளனவென, மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க தெரிவித்துள்ளார்.
நககம்புற பகுதியில், 150 வீடுகளும், திஸ்ஸபுற பகுதியில் 22 வீடுகளும், கரங்காவ பகுதியில் 28 வீடுகளும், மிஹிதுபற பகுதியில் 11 வீடுகளும் , சத்தாதிஸ்ஸபுற பகுதியில் 3 வீடுகளும், ஜயவர்தனபுற பகுதியில் 2 வீடுகளுக்கும் இவ்வாறு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களினால் சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment