காற்றின் வேகத்தால் கவிழ்ந்தது,படகு



காற்றின் வேகத்தால் ஆழ்கடல் படகு ஒன்று நீரில் மூழ்கியதில் அதில் பயனம் செய்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம்  வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆழ்கடலில் இருந்து கரைக்கு வந்த படகு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில்
மீன்களை இறக்கிவிட்டு,  படகு நங்கூரமிடும் இடத்திற்குச் சென்ற வேளையே படகு காற்றின்
வேகத்தால் கவிழ்ந்தது என்று படகு உரிமையாளர் தெரிவித்தார்.
படகில் இருந்து தொலைத் தொடர்பு சாதனங்கள், அருக்குலா, கெந்தா, பாரை, சுறா போன்ற
மீன்களை பிடிப்பதற்க பயன்படுத்தும் லைன் என்பன நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன்,  படகின் இயந்திரமும் சேதமடைந்துள்ளது.