அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச கால்நடை வைத்திய சுகாதாரக் காரியாலயப் பகுதியின் கீழ்வரும் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய உயிர்கொல்லி நோயான விசர் நாய்க் கடி நோய்கான தடுப்பு மருந்தைப் பெற்று, வழங்குமாறு, மிருக வைத்திய அதிகாரி எம்.ஜ.றிப்ஹான் வேண்டுகோள் விடுத்தார்.
விசர் நாய்க் கடி நோயிலிருந்து மக்களையும் விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில், இத்தடுப்பு மருந்துகள், தமது வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment