100 நாட்களில் 200 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்



( அப்துல்சலாம் யாசீம்)

100 நாட்களில் 200 வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (17) தோப்பூர் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் தோப்பூர் நூரியா வீதிக்கு கொங்கிறீட் விடுவதற்கான ஆரம்ப நிகழ்வினை  ஆரம்பித்து வைத்ததுடன் ஆசாத் நகர் 58 ஆம் கட்டை பகுதிக்கான கொங்கிரீட் வீதியையும் ஆரம்பித்து வைத்தார். 


தோப்பூர் மத்திய குழுவின் தலைவரும் கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான அப்துர் ரஸ்ஸாக் நளினி அவர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து இவ் வீதிகளுக்கான கொங்கிரீட் விடும் வேலைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

10 லட்சம் பெறுமதியான இவ் வேலைத்திட்டம் மட்டுமல்லாது  தோப்பூர் பிரதேசத்தில்  பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கவுள்ளதாகவும் தோப்பூர் மத்திய குழுவின் தலைவரும்  கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான அப்துர் ரஸ்ஸாக் நளினி இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தோப்பூர் வட்டார செயலாளர் எம்.முஜாஹித் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப்  எம்.ரிபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.