மூதூரில், காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு



( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மூதூர் பகுதியில் பேருந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து இன்று (  18 ஆம் திகதி) பிற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மூதூர், புலியடி சந்தியில்  மயானத்திற்குள் மறைந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் குறித்து ஆணும் பெண்ணும் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர் இதன் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை  இலக்கு வைத்து  துப்பாக்கி 
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  இதில் பேருந்தின் கண்ணாடி மட்டும் உடைந்துள்ளதாகவும் பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் பாதிக்கப்பட்ட ஜோடி திருகோணமலை காளி கோவில் சந்தியில் இறங்கியதாகவும் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 அத்துடன் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக  பொலிஸ் குவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.