அக்கரைப்பற்றில் கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டோருக்கு விளக்க மறியல்



#இர்சாத்.
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் நேற்றிரவு கொள்ளை நாடகத்துடன் சம்மந்தப்பட்ட பட்டியடிப் பிட்டி தனியார் கடை உரிமையாளர்,நிசாம் தாஹிர், மற்றும் வசந்த ராஜா ஆகிய இருவரும் இன்று மாலை அக்கரைப்பற்று பதில் நீதிபதி எஸ்.எல்.ஏ.றசீட் முன்னிலையில் அக்கரைப்பற்றுப் பொலிசாரால் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் எதிர்வரும் 18ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிபதி எஸ்.எல்.ஏ.றசீட்  உத்தரவிட்டார்.

இதே வேளை இச் சம்கவத்தில் மரணமடைந்தவரின் உடலம் அக்கரைப்பற்று அதார வைத்தியாசாலையில்  வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் பிரேதப் பரிசோதனை இடம் பெறவுள்ளது.