( அப்துல்சலாம் யாசீம்)
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அரசு பேருந்து கிண்ணியாவில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற சம்பவமொன்று இன்று (20) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட அரச பேருந்து கிண்ணியா ஊடாக திருகோணமலை செல்லவிருந்த நிலையில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏறுமாறு கூறி விட்டு சென்றதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதிக அளவிலான பொருட்களை ஏற்றி வந்த பயணிகள் இடை யில் இறக்கி விட்டமை யினால் பாரிய சிரமங்களை எதிர் நோக்கியதாகவும் தெரிவிக்கின்றனர் .
இவ்வாறான செயற்பாடுள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதற்கு அரச பேருந்து சபையின் முகாமையாளர்கள் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர் .
இதேவேளை கொழும்பில் இருந்து வந்தவர்கள் கிண்ணியா சந்தையில் மட்டக்களப்பில் இருந்து வந்த தனியார் பஸ் ஒன்று இன்று வரை திருகோணமலையை வந்து அடைந்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


Post a Comment
Post a Comment