குத்துச்சண்டையில் 6வது தங்கம் வென்று மேரி கோம் சாதனை



புதுடில்லி: 
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அசத்திய இந்தியாவின் மேரி கோம் ஆறாவது தங்கம் வென்றார். இதன் மூலம், அதிக தங்கம் வென்ற வீராங்கனை என உலக சாதனை படைத்தார். 

இந்தியாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் 'லைட் பிளைவெயிட்' 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒஹோடாவை சந்தித்தார். 

துவக்கம் முதலே அபாரமாக செயல்பட்டார் மேரி கோம். இவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹன்னா திணறினார். மூன்று சுற்று முடிவில் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஆறாவது தங்கத்தை (2002, 05, 06, 08, 10, 18) வசப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக, 6 தங்கம், ஒரு வெள்ளி (2001) வென்றுள்ளார்.