இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் தனஞ்சய 73 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ். எஸ். சி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றது. Jonny Bairstow 100 ஓட்டங்கைளப் பெற்றுக் கொடுத்தார்.
அதன்படி இங்கிலாந்து அணி 96 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.


Post a Comment
Post a Comment