விழிப்புணர்வு கண்காட்சியும் அறிவுறுத்தல் செயலமர்வும்



(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில், சித்த மருத்துவத் துறை பீடத்தின் ஏற்பாட்டில், நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியும், அறிவுறுத்தல் செயலமர்வும் இன்று  (19) காலை 10 மணிக்கு சித்த மருத்துவத்துறை தலைவர் வைத்தியகலாநிதி விஜிதா பகீரதன் தலைமையில் ஆரம்பமானது. 
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின்  முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி ஜீ. எப். ராஜேந்திரம் கலந்து கொண்டார். 
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் வளாகம் முதல்வர் வைத்தியகலாநிதி பேராசிரியர் வீ கனகசிங்கம் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
நீரிழிவு நோய் தொடர்பான சமூக விழிப்புணர்வு, இலவச பரிசோதனை உட்பட பல்வேறு வகையான காட்சிக் கூடங்களும் இக்கண்காட்சியின் போது காண்பிக்கப்பட்டன.