கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு



கொழும்பின் பல பகுதிகளில் இன்று (24) காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தெஹிவளை – கல்கிசை, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட மஹகரம , பொரலஸ்கமுவ உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனைத்தவிர, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் , இரத்மலான மற்றும் சொய்சாபுர குடியிருப்புத் தொகுதிக்கு அண்மித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

அம்பதலே நீர் சுத்திகரிப்புப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.