நீரில் மூழ்கி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு



வில்கமுவ, ஹந்துன்கமுவ பிரதேசத்தில் வாவி ஒன்றில் குளிக்கச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

மேலும் சிலருடன் வாவியில் குளிக்கச் சென்ற குறித்த நபர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கம்புறுகமுவ, மடிக பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் சாவகச்சேரி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.