துப்பாக்கி சூடு - ஒருவர் காயம்




ஹக்மன - பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

பாதை ஓரமாக நின்ற ஒருவர் மீது வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். 

இன்று மாலை 4.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹக்மன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.