(அப்துல்சலாம் யாசீம்)
மூதூர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் மீட்ஸ் அமைப்பின் அனுசரணையில் மூதூர் பிரதேச மஸ்ஜிதுக்களின் நிருவாகிகளுக்கு மஸ்ஜிதுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலான செயலமர்வு சனிக்கிழமை (17) மூதூர் திரிசீடி மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் மூதூர் பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாயல்களினதும் நிருவாகிகளும் கலந்து பயன்பெற்றனர்.
இதில் வளவாளர்களாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியா அரபுக் கலாசாலையின் பிரதி பணிப்பாளர் ஏ.சி.அகார் முஹம்மத், மீட்ஸ் அமைப்பைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் ,அஷ்ஷெய்க் அர்கம் நூரமித் ஆகியோர் கலந்து கொண்டு மஸ்ஜித்தை எவ்வாறு பயன்படுத்துவது, மஸ்ஜீதுக்களின் பணி என்ன என்பது தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹீர், மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கலாசாலையின் பணிப்பாளர் அப்துல் கரீம் ,பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment