அம்பாறை மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக விவசாயத் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், இன்று (21) தெரிவித்தார்.
குறைந்த நிலப்பரப்பில் மிளகாய்ச் செய்கையை மேற்கொள்வதற்கான பைகள் மானிய அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிளகாய் செய்கைக்கான இப்பைகளை மாவட்டத்திலுள்ள விவசாய போதனாசிரியர் காரியாலயங்களில் செய்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment