ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு



( அப்துல்சலாம் யாசீம்) 

சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் சம்பந்தமாக, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (04) திருகோணமலை  சன்சைன்  ஹோட்டலில் இடம் பெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை இடம்பெறவுள்ளதென, இத்திட்டத்தை அமுல்படுத்தும் வாழ்க்கை தொழில் பயிற்சி நிறுவனத்தின் திட்ட அதிகாரி எஸ்.சதீஸ் குமார் தெரிவித்தார்.
இத்திட்டம், அவுஸ்திரேலிய அரச நிதியுதவியுடனும், இலங்கை திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி   அமைச்சின் பங்களிப்புடனும் அமுலாகின்றது.
பெண்களின் திறன்களை மேம்படுத்தி வளர்ச்சியடையச் செய்தல் , தொழில் முயற்சியாண்மைக்கு சுற்றுலாத் துறை ஊடான விருத்தி, வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல திட்டங்களை உள்ளடக்கிய விரிவுரைகள் இதில் இடம்பெறவுள்ளன.