தொண்டாவுக்கு எதிராக



இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிராக இன்று மலையகத்தின் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா, சாமிமலை, டிக்கோயா, டில்லரி உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 8 நாள்களாக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தப் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரிய ஆர்ப்பாட்டமானது எவ்வித மு​டிவும் எட்டப்படாத நிலையில் கைவிடுமாறு தொண்டமானால் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ஆறுமுகன் தொண்டமானின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.