#சட்டத்தரணிஇஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்.
இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்ப மீஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் 2018/12/13 இல் இல் இலங்கையின் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானத்தை சட்ட விரோதம் எனக்கூறும் முதலாவது தீர்ப்பாக இதனைக் கருதலாம்.
இத் தீர்ப்பு பின்வரும் விடயங்களை கட்டியம் கூறிற்று
1) நீதித்துறை சுதந்திரமாக இயங்குகின்றது
2) மக்களால் மக்களுக்காக குறித்த காலப்பகுதிக்கென மக்கள் ஆணை மூலம் தெரிவு செய்யப்பட்ட நாட்டை ஆளும் நாடாளுமொன்றை,
நிறைவேற்றுத்துறை தான்தோன்றித் தனமாக செயற்பட்டு, அதனை உரிய காலத்திற்கு முன்னதாகக் கலைக்க முடியாது..
3) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு முரணான அல்லது சட்ட விரோதமான செயற்பாட்டினை நீதித்துறை கேள்விக்கு உட்படுத்தலாம் என்பது போன்றவையாகும்.
4)ஜனாதிபதியின் தீர்மானமொன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இத் தீர்ப்பானது, ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு இலங்கையின் ஒவ்வொரு குடியியல் மகனுக்கும் கிடைத்த வெற்றியாவே நான் கருதுகின்றேன். இது எந்தவொரு கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ கிடைத்த வெற்றியாகாது.
மேற்படி வழக்கினை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான புவனகே அலுத்விகார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ ஆகியோரைக் கொண்ட குழு விசாரித்து வந்த நிலையில், இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால், நியமிக்கப்படுகின்ற நீதிபதிகள் ஜனாதிபதியின் தீர்மானத்திற்து எதிர்த்து தீர்ப்பளிப்பார்களா என்ற ஐயப்பாடானது, இன்றைய தீர்பின் மூலம் நீக்கப்பட்டு நீதித்துறை வலுவேறாக்க அடிப்படையில்,செயற்படுகின்றது என்பதனையும் எடுத்தியம்பியுள்ளது.
அந்த வகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாலரை வருடத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்ப்பில் தெரிவித்த பிரதம நீதியரசர், அவ்வாறு ஜனாதிபதி முன்கூட்டி கலைப்பதாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



Post a Comment
Post a Comment