இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர்



(அப்துல்சலாம் யாசீம்) 

நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்  ரவூப் ஹக்கீம் அவர்களின் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீட்டில் குட்டிக்கராச்சி - இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் சப்ரின்
( நளீம்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் கிண்ணியா நகரசபையின்  தவிசாளர் நளீம், பிரதித் தவிசாளர் சப்ரின் ( நளீம் ), கிண்ணியா நகரசபை உறுப்பினர் ஆசாத், நகரசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி முஜீப், நகரசபையின் செயலாளர் றியாஸ், தொழில் நுட்ப உத்தியோகத்தர் றாஸீட் மற்றும் ஏனையோர் கலந்து கொண்டனர்.