(க.கிஷாந்தன்)
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று 07.02.2019 அன்று முன்னெடுக்கபட்டது. இதன் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அட்டன் டயகம பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு தோட்ட நிர்வாகம் மாதம் ஒன்றுக்கு 25நாள் தொழில் வழங்கினாலும் இறுதியில் எங்களுக்கு 5000ருபா சம்பளம் மாத்திரம் எஞ்சிகிறது. ஆகவே எங்களுக்க இம்முறை புதிய கூட்டு ஒப்பந்தம் படி வெறுமனே 20ரூபா மாத்திரம் அதிகரித்துள்ளனர். ஆகவே எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்
ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்ட தொழிற்சங்கங்கள் வெறுமனே 20 ரூபாவிறக்கு கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாதிட்டு விட்டு மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரங்களை கொண்டு செல்கின்றனர். எனவே தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு உரிய முறையில் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை மலையக அரசியல்வாதிகள் பெற்று கொடுக்கவிட்டால் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நல்ல பாடத்தினை புகட்டுவோம் என்றார்.


Post a Comment
Post a Comment