கிழக்கில் வெளுக்கும் வழக்கு



(இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்" தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது.

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை இன்றைய தினம்  19ஆம் திகதி திருமலை மேல் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம்  நீதிமன்றில் ஆஜராகவுள்னர்.

இதேவேளை  கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட மனுதாரரான மாகாணக் கல்விப் பணிப்பாளர், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூரின் அறிவுறுத்தலில், சிரேஸ்ட சட்டத்தரணி கிண்ணியா சபறுள்ளாஹ் ஆஜராகவுள்ளாார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  கடந்த மார்ச் மாதம் வழங்கிய  இடைக்காலக் கட்டளையின் பிரகாரம் அவர் மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தான் ஏலவே பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அவர் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.


கிழக்கு மாகாணம் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மிகவும் பின்தங்கி உள்ளது என தெரிவித்து கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவரது பதவி காலத்தின்போது எம்.கே.எம். மன்சூரினை கல்விப் பணிப்பாளராக நியமித்திருந்தார்.

அதற்கு முன்னர் அந்த பதவியில் இருந்த எம்.ரி.எ. நிசாமின் நிர்வாக நடவடிக்கைகள் மந்த கதியில் இருந்தமையின் காரணமாக அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மன்சூர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

4 மாதங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றி வந்த வேளை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மாகாண கல்விப்பணிப்பாளராக எம்.ரி.எ.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் தலையீட்டினால் மன்சூர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீன்டும் நிசாம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது பதவி பறிக்கப்பட்டமை அநீதி என குறிப்பிட்டு கல்விப்பணிப்பாளர் மன்சூர் திருகோணமலை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை அமுல்படுத்தக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.