இஸ்லாமிய கலாசார ஆடையுடன்,உயிரிழந்த குடும்பத்தவர்களை அரவணைத்தார் பிரதமர்.



நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.நியுசிலாந்து வரலாற்றில் மார்ச் 15 இதுவொரு கறுப்பு தினமென்றும்,இது போன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாது என்று காட்டமான அறிக்கையை விட்டடிருந்தார்.
இதேவேளை இத் துப்பாக்கி தாக்குதலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தவர்களை, முஸ்லிம்களின் கலாசார உடையில் சென்று ஆறுதல்  அளித்த விடயம் பரவலாக சிலாகிக்கப்படுகின்றது.