தென் அமெரிக்காவை புரட்டிப்போட்டது, சூறாவளி

அமெரிக்காவின் தென் பகுதியில் ஏற்பட்ட கடுமையான சூறாவளியில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான கட்டிடங்கள் சேதமானதால் பலர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு டெக்ஸாஸ் பகுதியில் உள்ள பிராங்ளின் எனும் பகுதியில் ஏற்பட்ட பலத்த சூறாவளியுடன், இடியும் சேர்ந்து கொண்டதால் அதிர்ந்த பல கட்டிடங்கள், கீழே விழுந்து நொறுங்கின. இந்த தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், பலரது வீடுகள் மற்றும் கார்கள் முற்றிலுமாக சேதமாகி நாசமடைந்தன.மின் இணைப்பு உள்ளிட்டவை டெக்சாஸ், மிசிசிப்பி, லூசியானா, ஆர்கன்சாஸ் மற்றும் ஜோர்ஜியா ஆகிய இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள இப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்டவர்களில் பலர், வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.


--- Advertisment ---