பொலிஸாரை தாக்கிவிட்டு பெண் ஒருவரை கற்பழித்த பிரதேச சபை உறுப்பினர் கைது

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேரை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய், பட்டஹதர பகுதியில் உள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த சிலரை குடிபோதையில் வந்த சிலர் தாக்கிவிட்டு அங்கிருந்த பெண் ஒருவரையும் கற்பழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே இவ்வாறு நீராடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவ்விடத்திடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பரிசோதகர்கள் இருவரையும் குறித்த நபர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட 10 பேர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அதே பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.--- Advertisment ---