நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம்


`அவருக்கும், எனக்கும், மகள்களுக்கும் ரொம்பச் சந்தோஷம். எங்களைப் பார்த்து, கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சி. கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம்."
``அவர் கன்னிகாதானம் செய்ததுதான் மிகப்பொருத்தம்!
நடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மகள்களின் திருமணமும் முடிந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இருக்கிறார், சீதா. மகள் அபிநயாவின் திருமண நிகழ்வு குறித்து, புன்னகையுடன் பேசுகிறார், சீதா.

சீதா

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஆல்பத்தை காண க்ளிக் செய்க....

``கடந்த வருஷம் இரண்டாவது பொண்ணு கீர்த்தனாவுக்கு கல்யாணம் நடந்துச்சு. அதைத் தொடர்ந்து மூத்த மகள் அபிநயாவுக்கான கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிச்சோம். கடந்த ஜனவரி மாதம் அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துச்சு. மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். தொடர்ந்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, குறிப்பிட்ட சில சினிமா பிரபலங்களுக்கு நான் நேரில் அழைப்பிதழ் கொடுத்தேன். வெளியூரில் இருந்த பிரபலங்களுக்கு வாட்ஸ்அப்ல பத்திரிகையை அனுப்பிட்டு, போன்ல அழைச்சேன். முக்கியமான சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொறுப்பை, பி.ஆர்.ஓ ரியாஸ்கிட்ட ஒப்படைச்சுட்டேன். எந்தக் குழப்பமும், கவலையும் இல்லாம, எல்லா வேலைகளையும் திட்டமிட்ட நேரத்துல முடிச்சுட்டோம்.

பார்த்திபன்

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஆல்பத்தை காண க்ளிக் செய்க....

என் அம்மாவுடன் பிறந்தவங்க 13 பேர். அம்மா வழி சொந்தத்துல, என் அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள்னு 100 பேர் இருக்காங்க. அவங்க எல்லோரும் வெவ்வேறு ஊர்கள்ல இருக்கிறதால, முக்கியமான சில நிகழ்ச்சிகள்லதான் நாங்க சந்திச்சுக்குவோம். பொண்ணு கல்யாணத்துக்காக அவங்களை முன்கூட்டியே வரச் சொல்லிட்டேன். மூணு நாளைக்கு முன்பே அவங்க எல்லோரும் தவறாம வந்துட்டாங்க. அதனால பல நாள்கள் என் வீடு கலகலப்பா இருந்துச்சு. அந்த மகிழ்ச்சி இனி கிடைக்குமாங்கிறதே சந்தேகம்தான்" என்கிறார் நெகிழ்ச்சியாக.



நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஆல்பத்தை காண க்ளிக் செய்க....

மகள் திருமண நிகழ்வு குறித்துக் கூறும் சீதா, ``சென்னை லீலா பேலஸில் கடந்த மார்ச் 24-ம் தேதி அபிநயாவின் கல்யாணம் நடந்துச்சு. தேர்தல் காரணத்தால், அரசியல் பிரபலங்கள் மட்டும் கல்யாணத்துக்கு வரலை. மத்தபடி நாங்க அழைச்சிருந்த எல்லா உறவினர்களும், பிரபலங்களும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. `எந்தக் குளறுபடிகளும் இல்லாம, கல்யாணம் சிறப்பா இருந்துச்சு'னு பல விருந்தினர்கள் என்கிட்ட தனிப்பட்ட முறையில் சொல்லியிருந்தாங்க. லதா ரஜினிகாந்த், `ரொம்பச் சந்தோஷம் சீதா! உங்களைப் பார்த்தாலே ஹேப்பியா இருக்கு. ரெண்டு மகள்களோட கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சுட்டீங்க'னு பாராட்டினாங்க. என் தூரத்துச் சொந்தமான நடிகை ராதிகா மற்றும் நடிகை ஶ்ரீப்ரியா இருவரும் என் தோழிகள். ஶ்ரீப்ரியா மட்டும் தேர்தல் வேலைகளால், கல்யாணத்துக்கு வரலை. மகளின் கல்யாணத்துக்குப் பிறகு, இருவரும் போன்ல எங்கிட்ட வாழ்த்துச் சொன்னாங்க. 

பார்த்திபன்

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஆல்பத்தை காண க்ளிக் செய்க....

என் சகோதரர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க, பல வாரங்களுக்கு முன்பு ஏற்காடு போயிருந்தேன். அங்க, `அபிநயாவின் கல்யாணம் முடிச்சுட்டுச்சுன்னா, இரு மகள்களுக்கும் கல்யாணம் செய்துகொடுத்த நிறைவு கிடைக்கும். அதைச் சீக்கிரமே உணரப்போறோம்'னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். அப்போ என்னை அறியாம, கவலைகளை மறந்து, வானத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் கைவிரிச்சு சிரிக்கிற மாதிரி நின்னேன். அதை என் சகோதரர் போட்டோ எடுத்தார். அந்த உணர்விலும், தாயா என் கடமைகளை முடிச்ச சந்தோஷத்துலயும் இப்போ இருக்கேன். புது மணமக்களுக்கு விருந்து கொடுத்துட்டேன்" என்பவர், நடிகர் பார்த்திபனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறார்.

சீதா

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஆல்பத்தை காண க்ளிக் செய்க....

``என் இரு மகள்களும் அப்பாவை மிஸ் பண்ணக்கூடாது. அவரும் மகள்களை மிஸ் பண்ணக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமா இருந்தேன். எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, எங்க மகள்களின் கல்யாணத்தில் ஒருமித்த அன்புடன் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தோம். இருவரும் தனித்தனியே பாதப் பூஜைகளைச் செய்துகிட்டோம். நான் செய்வதைவிட, மகளுக்கு அவர் கன்னிகாதானம் செய்துகொடுத்தால்தான் சிறப்பா இருக்கும்னு நினைச்சேன். அவரும் அதைச் சந்தோஷமா ஏத்துகிட்டு, இரு மகள்களுக்கும் கன்னிகாதானம் செய்துகொடுத்தார். பல்லக்கில் மகளைக் கூட்டிட்டு வரும் நிகழ்வையும் அவரே செய்தார். இதனால் அவருக்கும், எனக்கும், மகள்களுக்கும் ரொம்பச் சந்தோஷம். எங்களைப் பார்த்து, கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சி. கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம். எனவே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், சீதா.