இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்கு


உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நியூஸிலாந்து நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குப்தில் மற்றும் நிகோல்ஸ் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால் குப்தில் 19 (18) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த நிகோல்ஸ் மற்றும் கேப்டன் வில்லயம்சன் பொறுமையான ஆட்டத்தை விளையாடினர். இதனால் அணியின் ஸ்கோர் மெல்லமாக உயர்ந்தது.
30 (53) ரன்களில் வில்லியசன் வெளியேற பின்னர் வந்த ராஸ் டைலர் 15 (31) ரன்களில் நடையைக் கட்டினார். இதற்கிடையே அரைசதம் அடித்த நிகோல்ஸ் 55 (77) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த டாம் லதாம் 47 (56) ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் பிளங்கெட்  மற்றும் கிரிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கிலாந்து வலுவான பேட்டிங்கை கொண்டதால், அந்த அணிக்கு இது எளிமையான இலக்காகவே பார்க்கப்படுகிறது.