மருதமுனையில்,மாற்று திறனாளிகளுக்காக


பாறுக் ஷிஹான்

மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய 12ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா ஹியூமன் லிங்க் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல் கானின் தலைமையில் சனிக்கிழமை(13) முற்பகல்  ஹியூமன் லிங்க் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டார். அத்துடன் பல முக்கிய பிரமுகர்களும், விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டு கலாச்சார விழாவில் மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகள் வளப்படுத்தல் நிலையம், காரைதீவு கமு/கமு சண்முகா மகா வித்தியாலயம், அம்/ உஹன கனிஸ்ட வித்தியாலயம் என்பன கலந்து கொண்டன.

விசேட தேவையுடைய தமிழ்,சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய அவசியம், மாற்று திறனாளிகள் இந்த சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியம், அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி அதிதிகள் வலியுறுத்தி பேசினர். 

இதன் போது கருத்து தெரிவித்த ஹியூமன் லின்ங்(வலது குறைந்த மக்களுக்கான நிறுவனம்) பணிப்பாளர் ஏ.கமறுத்தீன்

எமது இலக்கு எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் உட்பட்ட சமூதாய வளர்ச்சியுமாகும். ஆனால் இன்றைய எமது சவால் இடப்பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையுமே காரணம்.2017 ம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது நிறுவனத்தை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று 55 பிள்ளைகளுடன் தொடர்கிறது.

12 வருடங்களிலே உளஇஉடல் வளம் குன்றிய பிள்ளைகளை தாய் தந்தைக்கு உதவக்கூடியவர்களாக இந்த நிலையத்தினூடாக வளர்க்கப்பட்டு வருகிறார்கள்.

எமது நிலையத்தினூடாக கல்வி ,மருத்துவம்இசமயம் என்ற சிந்தனை ஊட்டப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றனர்.மாணவர்கள் அவரவர் திறன்களை அடிப்படையாககொண்டு  அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கான ஆசான்களுக்கு போதிய பயிற்சியும்அளிக்கப்பட்டு வருகின்றன. சாதாரணமாக இவர்களுக்கான செலவுகள் மாதம் நான்கு இலட்சம்.  இவர்களுக்கான செலவுகளை சமூகத்திடம் இருந்தே பெற்று வருகின்றோம்.  இதனை தவிர மேலதிகமாக தனவந்தந்தர்கள் உதவி செய்ய  முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.