சந்திப்பு

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதியும் நியூயோர்க்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை நேற்று (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார். 

திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன, இராணுவ வெளிநாட்டு வரிசைப்படுத்தல் தொடர்பாகவும் வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்து உரையாடியதன் பின்பு இராணுவ தளபதியையும் சந்தித்தார். 

நிறைவில் இராணுவ தளபதியினால் திருமதி கேசேனுகா செனவிரத்னவின் வருகையை முன்னிட்டு இவருக்கு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.


--- Advertisment ---